Is Tamil Second Language in Canada? Fact Check

Is Tamil Second Language in Canada? Check below whether Tamil language is considered as Second language or not. tamil second language in canada, tamil language second language in Canada.

Shared News (பரவிய செய்தி)

தமிழ் மொழி கனடா பள்ளிகளில் இரண்டாம் மொழியாக படிக்கலாம்.

Fact Check (மதிப்பீடு)

 

 

 

Explanation (விளக்கம்)

கனடா நாட்டு பிரதமர், Justin Trudeau அவர்கள் குடும்பத்தோடு சில தினங்களுக்கு முன்பு நமது இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர் இந்தியா வந்தது முதல் தற்பொழுது சிரியாவில் நடக்கும் போர் வரை, கனடாவை சார்ந்த பல பொய்யான தகவல்கள் தமிழ் மக்களிடையே பரவி வருகின்றன. இதில் குறிப்பான ஒன்று கனடா பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழியென அறிவிக்கப்பட்டது என்று.

ஏன் அந்த செய்தி பொய் என்பதற்கான ஆதாரம்

மேற்கண்ட ஆதார தகவலானது கனடா நாட்டின் படிப்பு சம்மந்தப்பட்ட இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதில் கூறியிருப்பது, உலகத்திலுள்ள எந்த நாட்டு மாணவ/மாணவிகளும் கனடாவிற்கு வந்து English அல்லது French மொழியை இரண்டாம் மொழியாக தேர்வு செய்து படிக்கலாம் என்று. இதில் தமிழ் மொழியை பற்றி அவர்கள் குறிப்பிடவில்லை.

தமிழ் பள்ளிகள்

ஆனால், கனடாவில் மொத்தம் 57 தமிழ் பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் தமிழை முதல் அல்லது இரண்டாவது மொழியாக தேர்வு செய்து படிக்கலாம்.

இங்கு உங்களுக்கு கேள்வி எழும்பும், பரவப்பட்ட செய்தி உண்மை தானே என்று.

பரப்பப்பட்ட செய்தியில், கனடா பள்ளிகள் என்று ஒட்டுமொத்த கனடாவிலிருக்கும் இருக்கும் பள்ளிகளை குறிப்பிட்டு கூறியுள்ளனர். ஆனால் அங்கு இருக்கும் தமிழ் பள்ளிகளில் மட்டும்தான் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக தேர்வு செய்து கொள்ளலாம் என்று சொல்ல வருகிறோம்.

இது போன்று பொய்யான தகவல்களால், சிலர் நினைப்பது என்னவென்றால், தமிழுக்கு பெருமை சேர்க்கிறோம் என்று. ஆனால் இது மாதிரி பொய்யான தகவல்களால் நம் தமிழ் மொழி மற்றும் மக்களுக்கு இழிவை தான் ஏற்படுத்தும். காரணம் என்னவென்றால், இது போன்ற தகல்வல்கள் மற்ற மொழி வாசகர்கள் படிக்கும்பொழுது ஆராய்ந்து படிப்பார்கள். அப்பொழுது இந்த செய்தி பொய் என்று அவர்களுக்கு தெரியும்பொழுது அவர்கள் நம்மை, “இவர்கள் இப்படித்தான், எப்பொழுதும் பொய்யான செய்தியைத்தான் பரப்புவார்கள்” என்று கூறி நம்மை இழிவுப்படுத்துவர்.

சிரியா

இது கூட பரவாயில்லை, தற்பொழுது சிரியாவில் நடக்கும் போரை வைத்து பல பொய்யான தகவல்கள், போட்டோக்கள் மக்களிடையே பரவி வருகின்றன. இந்த பொய்யான தகவலை பரப்பும் ஜந்துக்களுக்கு அப்படி என்னதான் கிடைக்கிறதோ தெரியவில்லை. பழைய போட்டோக்கள், ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தளத்திருந்து எடுக்கப்பட்ட போட்டோக்களை வைத்து சிரியாவில் மக்களை இப்படித்தான் கொள்ளுகின்றனர் என்றெல்லாம் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்னவென்றால், சிரியாவில் 2011 -ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. காரணம், அந்நாட்டின் வளத்தை மற்ற நாடுகள் கைப்பற்ற முடிவு செய்தது. இதற்கு அந்நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ளாததால் வளத்தை கைப்பற்றத் துடித்த நாடுகள் போர் தொடுத்து வருகின்றனர்.

நம் மக்களுக்கு மற்ற நாடு மக்களின் மேல் உள்ள மனிதாபிமானம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆனால் அந்த மனிதாபிமானத்தை வைத்து சில விஷமிகள் மக்களை ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

உச்சக்கட்டமாக நம்மை முட்டாளாக நினைத்து அவர்கள் சொல்லிய விஷயம், நாம் அதிகமாக சிரியா போர் பற்றி ட்ரெண்ட் செய்ததால் போரை நிறுத்தவுள்ளனர் என்றும் நம் தமிழ் மக்கள் நீங்கள் எங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று ட்ரெண்ட் செய்ததால் தான் கனடா நாடு பிரதமர் Justin Trudeau, நம் நாட்டுக்கு வந்தார் என்றெல்லாம் பொய்யான தகவல்களை பரப்பினர்.

இந்த தகவல்களையெல்லாம், YouTurn குழுமம் பொய் என்று விரிவாக விளக்கத்தோடு மக்களுக்கு கூறிக்கொண்டுத்தான் இருக்கின்றனர். இது போன்று பல பொய்யான தகவல்களை பற்றி பார்த்து தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணையதள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

YouTurn.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.