பிற மனிதர்களை விட நம்மை அதிகம் நேசிக்கும் ஒரு உயிரினம் என்றால் அது நாய் தான். நாம் எவ்வளவு அடித்தாலும் அது நம்மை விட்டு என்றும் போகாது.

நாம் கண்டிப்பாக இந்த நன்றியுள்ள ஜீவனை பற்றி சில செய்திகளை அறிந்திருப்போம். ஒரு வாரம் முன்பு நடந்த ஒரு சுவாரசியமான விடயத்தை பற்றி பார்ப்போம்.

சபரி மலைக்கு மக்கள் பாத யாத்திரை செல்வது வழக்கம். அது போன்று சமீபத்தில் வெவ்வேறு ஊர்களில் இருந்து பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூரில் இருந்து ஒரு குழு பாத யாத்திரை செல்லும் பொழுது, ஒரு நாய் அவர்களுடன் சேர்ந்து நடந்து வந்துள்ளது. அந்த குழுவினர் அந்த நன்றியுள்ள ஜீவனுக்கு பைரவா என பெயர் வைத்துள்ளனர். அவர்கள் சாப்பாட்டிற்காக நிற்கும் பொழுதெல்லாம் பைரவாவுக்கும் உணவை கொடுத்துள்ளனர். பிறகு மற்றொரு பெங்களூரு பாத யாத்திரை குழுவோடு இணைந்து கொண்டது. அந்த குழு மக்களுடன் தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டம் வரை பயணித்துள்ளது.

அங்கிருந்து ஆந்திர பாத யாத்திரை குழுவோடு இணைந்து கரூரில் புகழ் பெற்ற (Hotel Valluvar) வள்ளுவர் ஹோட்டல் வரை வந்துள்ளது.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் தான் முதலில் சந்தித்த குழு மக்கள் அந்த ஹோட்டலில் தான் இளைப்பாற இருந்தனர். பைரவா மீண்டும் தான் முதலில் சந்தித்த குழுவோடு இணைந்து கொண்டது.

பைரவா கிட்ட தட்ட 320 கிலோமீட்டர்கள் நடந்து வந்துள்ளது. இதை பார்த்த அந்த குழு மக்களுக்கு ஒரே ஆச்சர்யமும் சந்தோஷமுமாக இருந்துள்ளது. அந்த குழுவில் உள்ள ஒரு நபரான (Ananthu Lokanath) அனந்து லோகானந்த் தங்களது பக்கத்தில் இந்த சுவாரசியமான நிகழ்வை நண்பர்களோடு பகிர்ந்துள்ளார். அந்த பதிவு,

அவர்கள் கூறியவாறு, “பைரவா சபரி மலைக்கு செல்லத்தான் தன் பயணத்தை ஆரமித்துள்ளது. எங்கள் குழுவுடன் அல்லது வேறொரு குழுவின் மூலமாவது சபரி மலையை அடைந்தே தீரும்” என்று கூறியுள்ளார்.

இது போன்று பல சம்பவங்கள் போன வருடம் நடந்துள்ளது. உதாரணத்திற்கு, அண்மையில், ஒரு பெண்மணி தன் கணவர் இறந்து விட்ட காரணத்தினால் பாதுகாப்பிற்காக ஒரு நாய் குட்டி வாங்கி வளர்த்தார். ஐந்து வருடத்திற்கு பிறகு (சமீபத்தில்) அந்த பெண்மணியும் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவர்கள் வளர்த்த அந்த நாய் துக்கம் தாங்காமல், உணவு கூட அருந்தாமல் சில நாட்களுக்கு அவரது வீட்டில் உள்ள புகைப்படத்தை பார்த்தவாரே தன் உயிரையும் மாய்த்து கொண்டது.

ஆம், நாய் என்றும் நன்றியுள்ளது தான்!

உங்களுக்கு பிடித்திருந்தால் சேர் செய்யவும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.