தமிழக மாணவர்கள் சிலர் நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் பல கிலோமிட்டர்கள் அப்பால் இருக்கும் வேறு மாநிலத்திற்கு செல்லவேண்டும் என்பது கண்டனத்துக்குரியது. சில ஏழை மாணவர்கள் வெளிமாநிலம் சென்று தேர்வு எழுத போதுமான பணவசதி இல்லாமல் இருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு வெளிமாநிலம் செல்ல சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்து தருமாறு தமிழக அரசிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் எந்த பலனும் இல்லை போலும்.

மாணவர்களுக்கு உதவும் வகையில், சில நல்ல உள்ளங்கள், தாங்கள் உதவி செய்கிறோம் என்று முன்வந்துள்ளனர். அந்த நல்ல உள்ளங்களின் தொடர்பு விவரம் கீழ்வருமாறு.

YouTurn along with J.B.A Steels helps Poor Students

எந்த ஒரு பொய்யான தகவல்களை கண்டுபிடித்து உண்மையான தகல்வல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரபல இணையதளமான YouTurn-ல் இருந்து சிலரிடம் உதவி கேட்கப்பட்டது. J.B.A Steels என்ற நிறுவனம் தாங்கள் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று முன்வந்துள்ளனர். அவர்களை தொடர்புகொள்ள,

தமிழக அரசு சார்பாக 1000 ருபாய்

தமிழக அரசு சார்பாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் (மாணவர் & ஒரு நபருக்கு) மற்றும் இதரச் செலவுக்கு ஆயிரம் ரூபாய் ஒரு மாணவருக்கு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை முதல்வர் அறிவித்துள்ளார். இதை அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாக முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம். சென்று வந்து போதிய ரசீதுகளை காட்டியும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவை நீட் தேர்வின் நுழைவுச் சீட்டு நகல் மற்றும் பள்ளியின் அடையாள அட்டை நகல். இதில் சிக்கலிருக்கும் எனில் Helpline no: 14417 தொடர்பு கொள்ளலாம்.

திரு.டி.டி.வி தினகரன் அவர்களின் உதவிக்கு

தமின்முன் அன்சாரியை தொடர்பு கொள்ள

நாகைத் தொகுதியில் இருந்து நீட் எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவியை பெற தம்மை உடனே அணுகலாம் என தமின்முன் அன்சாரி தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள 99407 38572 , 90920 20923, 04365 247788.

Agni College of Technology

Bose Makkal Paniyagam

மக்கள் பாதை

வெளி மாநிலங்களுக்கு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதவிருக்கும் ஏழை மாணவர்களுக்கு மக்கள் பாதை சார்பாக உதவிகள் செய்ய தயாராக உள்ளனர்.

தொடர்புக்கு: 74483 33541, 79047 58413.

வி.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ

கரூர் மாணவ மாணவிகள் பேருந்து மற்றும் தங்கும் இட வசதிகளை பெற கரூர் வி.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ அவர்கள் உதவி செய்ய முன்வந்துள்ளார்.

தொடர்புக்கு: 9442239911.

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்

கேரளா மற்றும் ராஜஸ்தான் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்.

தொடர்புக்கு: 96777208927 

சிங்கபூர் இணையக் குழு

 

சிங்கபூர் இணையக் குழு சார்பில் பஸ் வசதி ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

தொடர்புக்கு: +6591834946 or 9655333311

கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு.

மேலும் தகவல்களுக்கு எங்களோடு இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.