கீழே விழுந்தாலும் மொபைல் உடையாமல் தடுக்கும் மொபைல் கேஸ்

Frenzel's AD Case for Smartphone
TAGS: Mobile Air Bag, Philip Frenzel, AD Caseஇந்த கேஸ் நமது மொபைல்-க்கு ஒரு ஏர் பேக் போன்று செயல்படும். இந்த கேஸ்-ஐ வடிவமைத்தவர் பிலிப் பிரெண்ஸில், (Philip Frenzel ), வயது 25 . இவர் ஜெர்மன் யூனிவெர்சிட்டியில் படிக்கிறார். இந்த வடிவமைப்பிற்கும் காப்புரிமை பெற்றுக்கொண்டார் பிலிப்ஸ்.

Philip Frenzel

இந்த வடிவமைப்புக்காக Germany’s Mechatronics Prize for 2018 -ல் முதல் பரிசும் பெற்றுள்ளார் பிலிப்ஸ்.

இந்த கேஸ்-இல் Integrated Sensor பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சாரானது உங்கள் மொபைல் கீழே விழுவதை அறிந்துகொள்ளும் திறன் கொண்டது. உங்கள் மொபைல் கீழே விழும்பொழுது, இந்த சென்சாரானது கண்டுபிடித்து, 8 ஸ்ப்ரிங் மாதிரியான ஒரு அமைப்பை 4 பக்கங்களிலிருந்து வெளியே அனுப்பும். இந்த ஸ்ப்ரிங் போன்ற அமைப்புகள் கீழே விழுந்தபின் உந்து சக்தியை கொடுத்து மொபைல்-க்கு அடி ஏதும் படாமல் காப்பாற்றும்.

இதை கீழே உள்ள காணொளியை பார்த்து புரிந்துகொள்ளுங்கள்.

இந்த வடிவமைப்பு இன்னும் தயாரிப்பிற்கு வரவில்லை. பிலிப்ஸ் தான் சொந்தமாக தயாரிக்க மக்களிடையே நிதி திரட்ட உள்ளார். இவர் நிதியை Kickstarter என்ற ஆன்லைன் இணையதளம் மூலமாக வருகின்ற ஜூலை மாதத்தில் திரட்டவுள்ளார்.இந்த கேஸ்-கள் முழுமையாக தயாரித்த பின்பு தான் மக்கள் வாங்குவதற்கு கடைகளில் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும்.இந்த வடிமைப்பு மொபைல் கேஸ் துறையில் கண்டிப்பாக புரட்சியை உண்டாக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்.

கண்டிப்பாக இதை வடிவமைத்ததற்காக நாம் பிலிப்ஸ்-ஐ பாராட்டியே ஆகவேண்டும். இன்னும் இது போன்று பல கண்டுபிடிப்புகள் டெக்னாலஜி துறையில் வரும் ஆண்டுகளில் பார்க்க முடியும்.

உங்கள் நண்பர்கள் படிக்க ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.