நடிகர் சூர்யா விவயசாயிகளுக்காக ரூபாய் 1 கோடி நன்கொடை வழங்கினார்

Actor Surya Donated Rs.1 Crore for Tamil Nadu Farmers

விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ₹1 கோடி வழங்கப்பட்டது.

பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தியின் நடிப்பில், அண்ணன் சூர்யா அவர்களின் தயாரிப்பில் சிறு தினங்களுக்கு முன் வெளிவந்த படம், கடைக்குட்டி சிங்கம். இப்படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகியும், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமே காணப்படுகிறது.

இப்படம் விவசாயத்தையும், விவயாசிகளை போற்றும் விதமாக எடுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். இப்படத்தை நம் நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பார்த்துவிட்டு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இக்கொண்டாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். அப்பொழுது சூர்யா அவர்கள், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தமிழக விவசாயிகளின் நலனுக்காக ஒரு கோடி ரூபாயை சூர்யா வழங்கினார். இது தவிர படத்தின் லாபத்தில் ஒரு பங்கிலிருந்து நெல் ஜெயராமன் உள்ளிட்ட 5 சாதனை விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய சூர்யா, ”தமிழகத்தில் பொறியியல் மருத்துவம் போன்ற துறைகளில் பிரபலமானவர்களின் பெயர்களைக் கேட்டால் நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் விவசாயத்தில் பிரபலமானவர்களின் பெயரை கேட்டால் நமக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான்” என்று தெரிவித்தார். மேலும் கடைக்குட்டி சிங்கம் விவசாயிகளுக்கான படம் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னரே அவர் பிறந்தநாளை முன்னிட்டு 400 தமிழக அரசு பள்ளிகளிலுள்ள கழிப்பறைகளை புதிப்பித்து தருவதாக கூறியுள்ளார்.

படிக்க: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.