நடிகர் சூர்யா 400 அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை புதுப்பித்து தருவதாக கூறியுள்ளார்

நடிகர் சூர்யாவின் 43-வது பிறந்தாளானது நேற்று (23.07.2018) கொண்டாடப்பட்டது. சூர்யா மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார் மற்றும் செய்யவுள்ளார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதே போல் அவர் ரசிகர்களும் நேற்று மக்களுக்கு நல்லது செய்யும் விதத்தில் பல விஷயங்கள் செய்துள்ளனர். அதில் குறிப்பாக ரத்ததானம், அன்னதானம் செய்துள்ளனர் சூரிய ரசிகர்கள்.

அரசு பள்ளி கழிப்பறைகளை புதுப்பித்தல்

சூர்யா சமீபத்தில் ஒரு பத்திரிகையிடம், தான் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 400 அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை புதிப்பித்து தருவதாக கூறியுள்ளார். பல அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமாக மற்றும் இடிந்த நிலையில் உள்ளதாகவும், அதையெல்லாம் புதுப்பித்து மாணவர்களுக்கு உதவி செய்வதாக கூறினார் சூர்யா.

மற்றும் அவர் கூறியதாவது,

நீங்கள் ஒவ்வொருவரும் புதுபுது விஷயங்களை தினமும் கற்றுக் கொள்ளுங்கள். செய்யும் வேலையில் நாம் தான் பெஸ்டாக இருக்க வேண்டும் என்று உழையுங்கள். அந்த எண்ணத்தை உங்கள் மனதில் ஆழமாக விதையுங்கள். நல்ல பழக்கங்களை பழகுங்கள், கடைப்பிடியுங்கள். முக்கியமாக உங்கள் குடும்பத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுங்கள், என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.