ஜனவரி 8-ம் தேதி அன்று காணாமல் போன சிறுமி ஆசிஃபா, 17-ம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமிக்கு என்னென்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். சிறுமியை கொன்ற நபர்களை கைது செய்யவேண்டுமென்று இந்திய மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி வந்தாலும், இப்படி ஒரு ஜீரணிக்க முடியாத நிகழ்வும் நடந்துள்ளது. சிறுமியின் உடலை அடக்கம் செய்யும் போது நடந்த சம்பவம் ஒன்றை சிறுமியின் உறவினர்கள் தற்போது பகிர்ந்துள்ளனர்.

கத்துவா அருகேயுள்ள ரஸனா தான் ஆசிஃபாவின் சொந்த கிராமம். உறவினர்கள் ஆசிஃபாவின் உடலை அடக்கம் செய்வதற்காக ரஸனா கிராமத்தில், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த கிராம மக்கள் சிலர், குழி தோண்டப்படும் இடம் தங்களது என்றும், இங்கு உடலை புதைக்க கூடாது என்றும் கூறியுள்ளனர். உறவினர்கள் அந்த நிலம் எங்களுடையது என்று கூறியும் மறுப்பு தெரிவித்துவிட்டனர் அந்த கிராம மக்கள். அந்த தங்க மகளுக்காக இரக்கம் காட்ட கிராம மக்கள் ஒருவரும் தயாராக இல்லை.

இதை தொடர்ந்து, உறவினர் ஒருவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார். அவரது இடமானது 8-கி.மீ தொலைவில் உள்ளது. பிறகு அந்த உறவினருடைய நிலத்தில் ஆசிஃபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து ஆசிஃபாவின் தாத்தா கூறுகையில், “சிறுமியின் சடலத்தைப் புதைக்க எவ்வளவு நிலம் தேவைப்பட்டுவிடும். சிறுமியின் சடலத்தைக் கையில் நாங்கள் ஏந்திக்கொண்டிருக்கும்போதுகூட மனிதாபிமானமற்ற முறையில் கிராம மக்கள் நடந்துகொண்டது எங்கள் துயரை மேலும் அதிகப்படுத்துகிறது” என்றார்.

என்று தான் இது போன்ற செயல்கள் எல்லாம் முடிவுக்கு வருமோ என்று தெரியவில்லை.

உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.