கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்னரே வெயில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெயிலிலிருந்து உங்களை காத்துக்கொள்ள நாங்கள் பரிந்துரைப்பது, இயற்கை பொருட்களை தேடி செல்வதே. உதாரணம், வெயிலுக்கு நீங்கள் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை குளிர்பானமான இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை சர்பத் போன்றவற்றை பருகுங்கள். இது போன்றே மற்ற விடயங்களுக்கும் இயற்கை பொருட்களை நாடிச்செல்வது அவசியம்.

சரி மண் பாட்டிலுக்கு வருவோம்

கண்டிப்பாக நம் அனைவரின் வீட்டிலும் மண்பானை இருக்குமென்று நம்புகிறோம். வெயிலுக்கு பிரிட்ஜில் (Fridge) தண்ணீர் வைத்து குடிப்பதற்கு பதிலாக மண்பானையில் வைத்து குடித்தால், குளிர்ச்சியாகவும், உடம்புக்கு நல்லதாகவும் இருக்கும். இதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த மண் பாட்டில்கள்.

சென்னை ஐஐடி மாணவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்ப்பதற்காகவும், மண்பானை செய்யும் குயவர்களின் வருமானத்தை பெருக்கவும், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றே மண் பாட்டில்களை வடிவமைத்துள்ளனர். இதன் எடையும் குறைவு, எடுத்து செல்வதற்கும் வசதியாக இருப்பதால் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த பாட்டில்களை நீரை ஊற்றி வைத்துவிட்டு பிறகு குடித்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த பாட்டில்களை வடிவமைத்து உருவாக்கியவர் சந்தீப் குமார் கங்காரம், (FB: Sandeep Gangaram) வடிவமைப்புத்துரை, ஐஐடி, சென்னை. இவர் கடந்த 2016-ம் ஆண்டிலேயே மண் பாட்டிலின் வடிவமைப்பை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் குழு பாட்டிலுக்கு Kandy என்று பெயரிட்டுள்ளனர். சந்தீப் அவர்களை எல்லாரும் Sandy என்று செல்லமாக கூப்பிடுவார்களாம். ரைமிங்காக இருப்பதற்கு பாட்டிலுக்கு Kandy என்று பெயரிட்டுள்ளனர். இந்த பாட்டில்கள் தண்ணீரை 24 டிகிரி முதல் 27 டிகிரி வரை கட்டுப்படுத்தும். ஆதலால், தண்ணீர் குளுமையாக இருக்கும் என்று சந்தீப் கூறியுள்ளார்.

Sandeep with his Kandy Terracota Water Bottles

ஒரு லிட்டர் பாட்டிலின் விலை Rs.499 ஆகும். விரைவில் 750ml பாட்டில்களும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாட்டில் உங்களுக்கு வேண்டுமென்றால், Kandybottle.com என்ற வெப்சைட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Stay tuned for more updates!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.