நிப்பா வைரஸ் தாக்கி இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நிப்பா வைரஸ் என்றால் என்ன?

  • நிப்பா வைரஸ் பழந்திண்ணி வௌவ்வால்களிலிடம் முதலில் உருவாகிறது.
  • இது முதன்முதலில் 1998-ம் ஆண்டு மலேசியாவில் பரவியது.
  • 2004-ம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிப்பா வைரஸ் பரவியது.
  • ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவப்படுவதும் கண்டறியப்பட்டது.
  • நிப்பா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.
Nipah-virus-transmission-cycle

நிப்பா வைரஸால் தாக்கப்பட்ட மாம்பழங்களை நாம் உட்கொள்ளும்பொழுதோ அல்லது அந்த மாம்பழத்தை உண்ட விலங்குகளை நாம் உட்கொள்ளும்பொழுதோ நிப்பா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. ஆதலால் நீங்கள் பழங்கள் சாப்பிடும் முன்னர் நன்றாக தண்ணீரில் கழுவிக்கொள்ளவும் மற்றும் ஏதேனும் குருவிகள் உட்கொண்ட பழத்தை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

நிப்பா வைரஸ் அறிகுறிகள்

  • மூளை வீக்கம், மூளை காய்ச்சல்
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி

சிகிச்சை

நிப்பா வைரஸ் தாக்குதலுக்கு என குறிப்பாக சிகிச்சை ஏதும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.