சில தினங்களுக்கு முன்பு WhatsApp செயலியில் ஒரு சர்ச்சைக்குரிய மெசேஜ் ஒன்று மக்களிடையே பகிரப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், ஒரு கருப்பு புள்ளியோடு, Don’t touch here என இருக்கும். அதில் “தொடாதே” என்று குறிப்பிட்டிருந்தாலும், சில நண்பர்கள் அந்த புள்ளியை தொட்டு பார்க்கிறார்கள். அந்த புள்ளியை தொட்டவுடன், WhatsApp செயலி ஹேங் (Hang) ஆகி விடும், பிறகு சிறிது நேரம் கழித்து தான் செயலி பழைய நிலைமைக்கு திரும்பும். இந்த மெஸேஜிற்காக நீங்கள் பயப்பட தேவையில்லை.

சிலருக்கு WhatsApp is Not Responding, Do you want to close it? என்று வரும். அதில் Wait-ஐ கிளிக் செய்தாலே, சிறுது நேரத்தில் பழைய நிலைமைக்கு வந்துவிடும். Ok-ஐ கிளிக் செய்தால், செயலி க்ளோஸ் ஆகிவிடும், மீண்டும் நீங்கள் WhatsApp-ஐ ஓபன் செய்யவேண்டும்.

சரி, WhatsApp எதனால் ஹேங் ஆகிறது என்று பார்ப்போம்.

இதற்கு டாம் ஸ்காட் (Tom Scott) என்பவர் விளக்கம் தந்துள்ளார். அந்த கருப்பு புள்ளி மெசேஜ், Text-ஆக தான் நமக்கு வந்து சேரும். அந்த Text மெசேஜை நீங்கள் HTML-ஆக மாற்றினால், “‏” என்ற சொற்கள் மட்டுமே மிக அதிக அளவில் காணப்படும். இதற்கு Unicode Character என்று மற்றுமொரு பெயர் உள்ளது. அந்த சிறிய கருப்பு புள்ளியின் உள்ளே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட Unicode Character உள்ளது, அதை கீழ்கண்ட படத்தை வைத்து தெரிந்துகொள்ளவும்.

Whatsapp Black Dot Text to HTML

நாம் பொதுவாக ஆங்கில மொழியில் டைப் செய்யும்பொழுது, சொற்கள் இடது பக்கத்தில் ஆரம்பித்து வலது பக்கத்தில் முடியும், இதை Left-to-Right Mark என்று கூறுவார்கள். அதுவே அரபிக் மொழியை எடுத்துக்கொண்டால் வலது பக்கத்தில் ஆரம்பித்து இடது பக்கத்தில் முடியும், இதை Right-to-Left Mark என்று கூறுவார்கள்.

இதை எதற்காக சொல்கிறோம் என்று யோசிக்கிறீர்களா?

Control Character

இங்கு நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளபடவேண்டியது, Control Character என்பது நமக்கு வந்த மெசேஜ், Left-to-Right Mark-ஆ அல்லது Right-to-Left Mark-ஆ என்று கண்டறிய WhatsApp செயலியிலுள்ள Text Render-க்கு உதவி செய்யும். Text-ல் இருந்து HTML-க்கு மாற்றியவுடன் கிடைக்கும் எழுத்துக்களை (இரண்டு படத்தில் வலதுபுறம் இருக்கும் HTML எழுத்துக்கள்) தான் Unicode Character அல்லது Control Character என்று கூறுவார்கள்.  இந்த கருப்பு புள்ளி மெசேஜை உருவாக்கியவர், அதிக அளவில் (இரண்டாயிரத்திற்கும் மேல்) Unicode Character-ஐ இந்த கருப்பு புள்ளியினுள்ளே மறைத்து வைத்துள்ளார்.

அதுவே Good Morning, have a nice day என்ற மெசஜை Text to HTML-க்கு மாற்றும் பொழுது, உங்களுக்கு எப்படி வந்ததோ அதே போன்று தான் இருக்கும். இதை புரிந்து கொள்ள, படத்தை பார்க்கவும்.

Good morning, Text 2 HTML

இந்த கருப்பு புள்ளியிலுள்ள Control Character-கள் இரண்டாயிரத்திற்கு (2000) மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதால், இது Left-to-Right Mark-ஆ அல்லது Right-to-Left Mark-ஆ என்பதை தெரிந்துகொள்ள Text Render சில நேரம் எடுத்துக்கொள்ளும். Text Render எடுத்துக்கொள்ளும் நேரம் தான் செயலி சிறிது நேரம் ஹேங்காக காரணமாம்.

In English

What is the reason behind that Black Dot message which makes WhatsApp “Hang” for sometime?

A popular YouTuber named, Tom Scott have given an explanation for this. If you convert the Text message received in to HTML, you will be able to see the letters “‏” repeatedly for long numbers. The letters which we get after converting Text to HTML is called as Unicode Characters or Control Characters. If you send a normal Good morning message, and convert it to HTML, you will get same message as Control Character output.

But here, the creator of that Black Dot message has used invisible 2000 Unicode or control characters inside the black dot. These characters are the ones which instruct the Text Renderer in WhatsApp, whether to display the text as left-to-right or right-to-left. When you tap on the message, the text renderer tries to work out which character you are tapping on. As there are a lot of characters with conflicting instructions, the app hangs up until it can make a decision.  

This is the reason behind WhatsApp hang or crash using that Black Dot message. 

Comment below what you think.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.