40 ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கம்பீர் சிங் என்பவர், தற்பொழுது யூடியூப் உதவியால் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

கடந்த 1978-ம் ஆண்டில், சில காரணங்களுக்காக தன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார் கம்பீர் சிங். அவருக்கு அப்பொழுது 26 வயது. பல இடங்களில், பல நாட்கள் தேடியும் கம்பீர் சிங் காணவில்லை என்பதனால், உறவினர்கள் அவரை தேடுவதை விட்டுவிட்டனர்.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், Firoze Shakir என்பவர் தனது யூடியூப் சேனலில், மும்பையில் பிரதான சாலைகளில் பழைய பாடல்கள் பாடியபடி அலைந்த கம்பிர் சிங்கை படம்பிடித்து பதிவேற்றம் செய்துள்ளார்.

Firoze Shakir with Gambir Singh

அந்த காணொளியில் தான் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும், தன் குடும்பத்தை பற்றியும் கூறியுள்ளார் கம்பிர் சிங்.

இந்த காணொளியை பார்த்த கம்பிரின் உறவினர் ஒருவர் காவல் துறையிடம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் உதவியுடன், கம்பிர் சிங் விமானம் மூலமாக இம்பாலாவிற்கு அழைத்து வரப்பட்டார்.

Gambir Singh United with Family

அவர் 40 வருடம் கழித்து பார்த்த உறவினர்கள், கண்ணீர் மல்க வரவேற்றது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.