இன்று, Falcon Heavy ராக்கெட்டானது விண்ணில் ஏவப்படவுள்ளது. இதில் என்ன ஆச்சிர்யமென்றால், இந்த ராக்கெட்டில் கார் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அது தான் Tesla Roadster கார். யார், ஏன் மற்றும் எதற்காக ஒரு காரை விண்வெளிக்கு (செவ்வாய் கிரகத்திற்கு) அனுப்புகிறார்கள் என்று பார்ப்போம்.

SpaceX

SpaceX நிறுவனமானது இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டின் பெயர் Falcon Heavy, பால்கான் ஹெவி. இந்த ராக்கெட்டானது அதிக எடை உள்ள பொருட்களை நம் பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச்செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகள் அங்கு வெடிக்காமல், பூமிக்கு மீண்டும் வருமாறு வடிவமைத்துள்ளனர். இதனால் மிகப்பெரிய பணச்செலவு குறைக்கப்படும். இந்த பால்கான் ஹெவி ராக்கெட்டானது, மூன்று பால்கான் 9 ராக்கெட்டுக்களோடு இணைக்கப்பட்டுள்ளது.

பால்கான் ஹெவி

மூன்று பால்கான் 9 ராக்கெட்டுகளுக்கு மேல் பால்கான் ஹெவி வாகனம் வைக்கப்பட்டுள்ளது. பால்கான் ஹெவிக்கு, வாகனம் (Vehicle) என்று தான் பெயர்.

பால்கான் 9

இன்று விண்ணில் ஏவப்பட்ட இருக்கிறது

இது, பால்கான் ஹெவியால் அதிக எடையை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு வரும், என்று காண்பிப்பதற்க்காக நடக்கப்படும் ஒரு செயல் விளக்கம். இன்று மதியம் 1.30 ET மணியளவில், அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை 12.00 AM அதிகாலை, பால்கான் ஹெவி விண்ணில் ஏவப்படவுள்ளது.

உள்ளே கார் வைக்க காரணம்?

இந்த SpaceX கம்பெனியின் நிறுவனர் Elon Musk.

இவர் டெஸ்லா மற்றும் பல்வேறு கம்பனிகளுக்கு உரிமையாளராக இருக்கிறார். டெஸ்லா கம்பெனியில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்கின்றனர். இதில் ஒன்று தான் Tesla Roadster கார். இந்த கார்-ஐ தான் பால்கான் ஹெவி ராக்கெட்டில் வைத்து அனுப்புகின்றனர்.

காரை வைத்து அனுப்ப காரணம்?

இது ஒரு செயல் விளக்கமென்பதால், அதிக எடைக்காக காரையே அனுப்புவோம் என்று Elon Musk முடிவுசெய்துள்ளார். இந்த செயல்பாட்டை அனிமேஷன் வழியாக நமக்கு காண்பித்துள்ளார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.

இந்த செயல்பாடு வெற்றி அடைந்தால், மிகவும் குறைவான பொருட்ச்செலவில் ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பலாம்.

மேலும் சுவரிசயமான செய்திகளுக்கு கீலே இருக்கும் லைக்-ஐ அழுத்தி இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.