1982-ம் ஆண்டு தோன்றிய Super Blue Blood Moon, சூப்பர் ப்ளூ பிளட் மூன் (செம்ம நீல ரத்த நிலா), 35 வருடங்களுக்கு பின்பு, நாளை (31.01.2018) இந்தியாவிலுள்ள மக்களால் பார்க்க முடியும். அமெரிக்கா மக்கள் 150 ஆண்டுகளுக்கு பின்பு இந்த அறிய நிகழ்வை பார்க்க உள்ளனர்.

சரி, சூப்பர் ப்ளூ பிளட் மூன் (செம்ம நீல ரத்த நிலா) என்றால் என்ன?

இதை புரியும்படி தனித்தனியாக பிரித்து பார்ப்போம்.

Super Moon – சூப்பர் மூன்

சூப்பர் மூன் என்றால், நாம் அன்றாடும் பார்க்கும் நிலவானது வழக்கத்தைவிட பெரியதாக தெரியும்.

நிலா பெரியதாக தெரிய காரணம்?

நம் எல்லோர்க்கும் தெரிந்த ஒன்று, நிலா பூமியை முழு வட்டத்தில் சுற்றி வராமல், ஒரு நீள்வட்ட பாதையில் தான் சுற்றி வரும். இதை கீழ்கண்ட படத்தை வைத்து புரிந்து கொள்ள முடியும்.

Super Moon Explanation

இதை நாம் நம் பள்ளிக்காலங்களில் படித்த ஒன்று தான். Apogee என்றால் உச்சநிலை, இரண்டு கோள்களுக்கு இடையே உள்ள மிக நீண்ட தூரம். Perigee என்றால் அண்மைநிலை, இரண்டு கோள்களுக்கு இடையே உள்ள குறுகிய தூரம் என்று படித்திருப்போம்.

இந்த சூப்பர் மூன் நிகழ்வானது ஒரு வருடத்தில் நான்கு அல்லது ஆறு முறை நடக்கும். அது மட்டுமில்லாமல் நாளை (31.01.2018) முழு நிலவு (பௌர்ணமி).

Blue Moon – ப்ளூ மூன்

இங்கு, நாம் நிலவின் நிறத்தை பற்றி பார்க்க போவதில்லை. ஒரு மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தோன்றினால் அது “ப்ளூ மூன்” என்று கருதப்படுகிறது.

இதற்கு மற்றுமொரு நிறத்தைச்சார்ந்த விளக்கமும் உள்ளது.

வளிமண்டலத்திலுள்ள தூசு மற்றும் புகை காரணமாக, நிலா நீல நிறத்தில் தெரியும் என்பது மற்றோரு விளக்கம். இங்கு நாம் நாளை இந்த நிற மாற்றத்தை பார்க்கபோவதில்லை. இந்த மாதத்தின் முதல் தேதியில் முழு நிலவு ஏற்பட்டது, மற்றும் மாத கடைசியில் மீண்டும் முழு நிலவு ஏற்படவுள்ளதால், Blue Moon – ப்ளூ மூன் என்று கூறுகிறார்கள்.

Blood Moon – பிளட் மூன்

பிளட் மூன் என்பது முழு சந்திர கிரகணத்தை குறிக்கும். முழு சந்திர கிரகணித்தின்போது நம் பூமி நிலவை சூரியனிடமிருந்து முழுவதுமாக மறைத்து விடும். நமது பூமியின் நிழலில் நிலவு இருக்கும், இந்த நிழலை “Umbra” என்று கூறுகின்றனர்.

நிலவை நம் பூமி மறைத்தாலும், சூரியனிலிருந்து வரும் ஒளியானது நம் பூமியின் விளிம்பில்ப்பட்டு நிலவின்மேல் படும். இதற்கு பெயர் Scattering, அதாவது ஒளிச்சிதறல் என்று பொருள். பூமியின் நிழல் விளிம்புகளில் சிவப்பு நிறமாக இருக்கிறது, அதே காரணத்தினால் சூரிய அஸ்தமனம் சிவந்திருக்கும். இதனால் தான் நிலவு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் தெரிகின்றது, ஆதலால் பிளட் மூன் என்ற பெயரும் வந்தது. இதை கீழ்கண்ட படத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இந்த மூன்று நிகழ்வும், Super Moon, Blood Moon, Blue Moon ஒரே நேரத்தில் நடக்க இருப்பதால், இதை Super Blue Blood Moon என்று சொல்கிறார்கள்.

நமது தமிழ்நாட்டிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், 31.08.2018 அன்று மாலை 6-மணியிலிருந்து நிலவை பார்க்க சொல்கிறார்கள். இந்த நிகழ்வு முழுவதுமாக முடிய இரவு 9.40 மணியாகும்.

மேற்கண்ட படம் 2015-ல் Blood Moon – பிளட் மூன் தோன்றியபோது எடுக்கப்பட்டது.

இது போன்ற தகல்வல்கள் மற்றும் செய்திகளை தெரிந்துக்கொள்ள எங்களது Facebook பக்கத்தை கீழ்கண்ட பட்டனை கிளிக் செய்து லைக் செய்துக்கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.